எழுத்தாளர்

விக்கிமேற்கோள் இலிருந்து

எழுத்தாளர் (Writer) என்பவர் அவருடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு பல்வேறு வகையான பாணிகளிலும் நுட்பங்களிலும் எழுதப்பட்ட சொற்களைப் பயன்படுத்தும் ஒரு நபர் ஆவார். நாவல்கள், சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியக் கலை வடிவங்களையும் மற்றும் படைப்பாக்க எழுத்துக்களையும் இவர் உருவாக்குகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் அனைவரும் அரசர்களைப் புகழ்ந்து எழுதினர்கள். அப்படி புகழ்ந்து எழுதினால்தான் அவர்களுக்கு வாழ்வு என்ற நிலை இருந்தது. அப்பேர்ப்பட்ட காலத்தில் கூட திருவள்ளுவர் போன்றவர்கள் மக்களுக்காக எழுதினர்கள். ஆனqல் இப்போதைய எழுத்தாளர்கள், அரசர் காலத்து எழுத்தாளர்களின் நிலையிலே தான் இருக்கிறார்கள். நான் மனதில் பட்டதை அப்படியே சொல்பவன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். அரசியலில் செல்வாக்கு பெற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்து எழுதினால் தான் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும் என்று இன்றைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். —மதுரை முத்து (28-10-1974) (மதுரை மாநகராட்சி மேயர்)[1]
  • எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ‘மை’, கய'மை', அறியா'மை' போன்ற ‘மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது‘மை’, 'உண்மை’, பொறு'மை', வறு'மை', உரி'மை'; கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான்.என். எஸ். கிருஷ்ணன்[2]
  • கலைஞர், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்! —அரு. ராமநாதன்[3]
  • தன் இதயத்துள் உள்ளதைப் பார்த்து. அவன் அங்கு காண்பதை அப்படியே உண்மையாக எழுதக்கூடிய எந்த மனிதனுக்கும் ஏராளமான வாசகர்கள் இருப்பார்கள். - எட்ஹோ[4]
  • எழுத்து சமயத்தைப் போன்றது. அதில் ஈடுபடத் தீர்மானிப்பவன் தானே தன் கதி மோட்சத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். - லாரிமெர்[4]
  • வாசகனின் நேரத்தில் அதிகமாய் எடுத்துக்கொள்ளாமல், அவனுக்கு மிக அதிகமான அறிவை அளிப்பவன் மிகப் பெரும் பணியைச் செய்கிறான். - ஸிட்னி ஸ்மித்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. 4.0 4.1 4.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எழுத்தாளர்&oldid=36704" இலிருந்து மீள்விக்கப்பட்டது