முன்யோசனை
Appearance
முன்யோசனை (Forethought) என்பது குறித்த மேற்கோள்கள்
- குறைவான முன்யோசனை மூடனின் செயல்; கூடுதலான முன்யோசனை துயரம் நிறைந்தவன் செயல், - ஸெஸில் [1]
- சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கின்றது. - பக்ஸ்டன்[1]
- அதிதீவிர ஆசையினால் வெற்றி பெறும் காரியங்கள் மிகச் சிலவே. அமைதியான முன்யோசனையினால் வெற்றி பெறுபவை மிகப்பல. - தூசிடைடஸ்[1]
- தூத்திலுள்ளதைப்பற்றிச் சிந்தனை செய்யாத மனிதன், தன் அருகிலேயே சோகம் தங்கியிருப்பதைக் கண்டுகொள்வான். - கன்ஃபூஷியஸ்[1]
- நன்றாகவும் கவனமாகவும் செய்யப்பெற்ற காரியங்களைப்பற்றி அஞ்ச வேண்டியதில்லை. -ஷேக்ஸ்பியர்[1]
- உன் வாயையும் பணப்பையையும் கவனமாய்த் திற, உன் செல்வத்தையும் புகழையும் பற்றி வெளியே நல்ல மதிப்பிருக்கும். - ஸிம்மர்மன்[1]