பிரெடிரிக் சில்லர்
Appearance
(ஷில்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யோகன் கிறிசுடோப் பிரெடிரிக் பொன் சில்லர் ( 10 நவம்பர் 1759 -9 மே 1805) செருமானிய கவிஞரும் மெய்யியலாளரும் வரலாற்றாளரும் நாடகாசிரியரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- அமைதியாயுள்ளவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை-[1]
- அறிவாற்றல் என்பது மூளையின் ஆற்றல்.[2]
- நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம்.[3]
- லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும்.[4]
- ஆசிரியன் எதை எழுதாமல் விடுக்கின்றானோ அதைக்கொண்டே அவன் திறமையை நிர்ணயிக்க முடியும்.[5]
- எதிரிப்பு ஊக்கமுள்ளவரை வெறி கொள்ளச் செய்யும் அவரை வேறு வழியில் திருப்புவதில்லை.[6]
- நடையில் வல்ல கலைஞனை அவன் கூறாமல் விடுகிற விஷயங்களிலிருந்தே நான் கண்டு கொள்கிறேன்.[7]
- கண்ணின் ஒளி கடவுளின் உன்னதப் பரிசு எல்லா உயிர்களும் ஒளியிலிருந்து வாழ்கின்றன. படைக்கப்பெற்ற அழகிய பொருள் ஒவ்வொன்றும், செடிகளும். எல்லாம் உவகையோடு ஒளியின் பக்கம் திரும்புகின்றன.[8]
- பொதுமக்களின் நம்பிக்கை அதற்கு ஆதாரமில்லாத போதிலும், உண்மையைப் போன்றே பயனுண்டாக்கிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. [9]
- கேலி செய்வதில், செய்தவனே முதலில் சிரிக்கும்படி ஏற்பட்டால், அதன் முக்கியம் போய்விடும்.[10]
- தன் கௌரவத்திற்காக மகிழ்ச்சியோடு துணிந்து முன்வராத நாடு கழிவானது. [11]
- வாக்குகளை நிறுத்துப் பார்க்க வேண்டும். எண்ணக்கூடாது.[12]
- தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம்.[13]
- த மேகங்களையே பார்த்துக்கொண்டு நாம் கட்டடத்தை மேலும் மேலும் உயரமாய்க் கட்டிக்கொண்டே போகிறோம். கீழேயுள்ள மாபெரும் தூண்கள் போதிய அடிப்பை யில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதைப்பற்றி நாம் சிந்திப்பதேயில்லை.[14]
- காலம் புனிதமாக்குகின்றது. நெடுங்காலத்திற்கு முந்திய விஷயம் சமயமாகிவிடுகின்றது.[15]
- இந்த வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள பெயர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகின்றது.[16]
- மிகவும் அதிகக் கவனமாயிருப்பவன் செய்து முடிப்பது கொஞ்சமாய்த்தானிருக்கும்.[17]
குறிப்புகள்
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 39-40. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 67-68. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உரைநடை. நூல் 176-178. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 136-137. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 142. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 178-179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 170. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தத்துவ ஞானம். நூல் 42- 44. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-84. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 262-263. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 304. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.