மு.வரதராசன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது; எண்ணச் செய்யவும் முடியாது. படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும். தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது. அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும். இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும்; தொடர்ந்து படிக்கப் படிக்க, இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்க முடியாத துணையாக இருக்கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச் சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறும் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும். வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு.
    • டாக்டர் மு. வரதராசன், "இலக்கிய ஆராய்ச்சி" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: நல்ல நூல், பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.

"https://ta.wikiquote.org/w/index.php?title=மு.வரதராசன்&oldid=18235" இருந்து மீள்விக்கப்பட்டது