மு. க. ஸ்டாலின்
Appearance
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: 1 மார்ச்சு 1953), என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். [1]
- திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்திற்கு எதிராக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை, என்றும் திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல.[2]
- திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது... உருவாக்கும்; எதையும் சிதைக்காது... சீர்செய்யும்; யாரையும் பிரிக்காது... அனைவரையும் ஒன்று சேர்க்கும்; யாரையும் தாழ்த்தாது... அனைவரையும் சமமாக நடத்தும். [3]
- என்னை 'சாஃப்ட் (மென்மையான) முதல்வர்' என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட், தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன்.[4]
- அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைத் தான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன். நான் ஒரு பக்கம் திமுக தலைவர், மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது. [5]
- இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.[6]
- புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும், திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை. [7]
- பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். [8]
- மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம். அதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். [9]
- எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமில்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுந்தியிருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு.[10]
- தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. [11]
- தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாட்டை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களையும் மோடி வஞ்சிக்கிறார். [12]
- 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மோடி மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். சமூகநீதி, இட ஒதுக்கீடு பற்றி அவர் பேசுவதில்லை. 10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம்.[13]
- தற்போது இந்த ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே அதற்கு சாட்சி. ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என சொன்னார் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன். இது எனது அரசு அல்ல, நமது அரசு. அந்த வகையில், நாடும் மாநிலமும் பயன் பெற உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்தோடு தொடர்வேன்.
இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன், பெருமையோடு சொல்கிறேன்... தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு![14] - அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி![15]
சான்றுகள்
[தொகு]- ↑ மு.க ஸ்டாலினுக்கு ராசியான 7 ஆம் எண்: 133 எம்எல்ஏக்கள்... 34 அமைச்சர்களுடன் 7ஆம் தேதி பதவியேற்பு (7 மே 2021).
- ↑ திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல - முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்!. எடிவி பாரத் (24 மே 2022).
- ↑ “திராவிட மாடல் எதையும் இடிக்காது... உருவாக்கும்; யாரையும் தாழ்த்தாது... சமமாக நடத்தும்” - ஸ்டாலின் விளக்கம். இந்து தமிழ் திசை (24 மே 2022).
- ↑ நேர்மையானவர்களுக்கு நான் ‘சாஃப்ட்’, தவறு செய்வோருக்கு நான் ‘சர்வாதிகாரி’ - முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (10 ஆகத்து 2022).
- ↑ அமைச்சர்களே இப்படி நடந்தால் நான் யாரிடம் கூறுவது - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (09 அக்டோபர் 2022).
- ↑ 'இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்' - முதல்வர் ஸ்டாலின். இந்து தமிழ் திசை (10 அக்டோபர் 2022).
- ↑ புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (12 திசம்பர் 2022).
- ↑ “பாஜகவை ஒற்றுமையால் மட்டுமே வீழ்த்த முடியும்” - ஸ்டாலின் பேச்சு @ திமுகவின் ‘மகளிர் உரிமை மாநாடு’. இந்து தமிழ் திசை (14 அக்டோபர் 2023).
- ↑ ”மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (31 அக்டோபர் 2023).
- ↑ “எனக்கு உடல்நிலை சரியில்லையா... சிரிப்பு தான் வந்தது” - அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (12 சனவரி 2024).
- ↑ “தேசபக்தியை திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு. இந்து தமிழ் திசை (14 மார்ச் 2024).
- ↑ `மோடி எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார்?' - மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!. விகடன் (09 ஏப்ரல் 2024).
- ↑ புதுச்சேரி: ``மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார் மோடி!” - கடுகடுத்த முதல்வர் ஸ்டாலின். விகடன் (07 ஏப்ரல் 2024).
- ↑ “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி” - 3 ஆண்டு கால திமுக ஆட்சி; முதல்வர் பெருமிதம். இந்து தமிழ் திசை (07 மே 2024).
- ↑ @mkstalin (Sep 6, 2024). மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன..