செயல்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
 1. தீய செயல்களி நல்ல சொற்களினாலேயே மறைத்து விட்ட ஒருவர், மேகத்திலிருந்து வெளிப்பாட்ட வெண்ணிலாவைப் போல் விளங்குவார் - புத்தர்
 2. ஒன்றைத்தொடங்காமல் இருப்பதே அறிவுக்குச் சிறப்பு. அங்ஙனம் தொடங்கின் அதை இறுதி வரையில் செய்து முடிப்பது மிகச் சிறப்பு. - ஒரு வடமொழிக்கவிஞர்
 3. நற்செயலின் மேன்மையைக் கருதியே அதைச் செய்ய வேண்டும். அதனால் வரும் லாப நட்டங்களைக் கருதியல்ல. -----அக்பர்
 4. நல்ல செயல்கள் அழகிய நல்முத்துக்கள் போன்றவை. நல்ல சிந்தனை என்ற நூலினால் அவை கோர்க்கப்பட்டுள்ளன. - சார்லஸ் எலியட்
 5. நாம் எந்த செயல்களைச் செய்யலாம் என்று முடிவு செய்வோம். நாம் செய்யும் செயல்கள் நம்மை இத்தகையவர் என்று முடிவு செய்யும். -வொன்ஸ்
 6. நிறைய எண்ணெய் இருப்பினும் காற்றாடிக்கின் தீபம் அணையும். நல்ல செயல்கள் பல இருப்பினும் கெட்ட செயல் ஒன்றால் யாவும் அழியும். --- ஒரு வடமொழிக் கவிஞர்.
 7. விதைத்த விதை முளைக்கத் தவறினாலும் தவறும். பெரும்பாலோர் எண்ணும் எண்ணம் செயலாகத் தவறாது -- மு. வரதராசன்
 8. எந்த நிகழ்ச்சியும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதன் படி நல்லதோ கெட்டதோ ஆகிறது. -மார்க்கஸ் அரேலியஸ்
 9. எந்த காரியமும் நனவாகும் வரை கனவாகத்தான் உள்ளது. - ஒர் அறிஞர்.
 10. எந்தக் காரியத்தையும் செய்ய முற்படும்போது; அதைச் செய்வதால் ஏற்படக் கூடிய முடிவை முன் கூட்டியே சிந்தித்துப் பார்த்த பிறகு அதைச் செய்திட்டால் உறுதியாக வருந்தக்தக்க முடிவு எதுவும் அமையாது -கான்பூசியசு[1]
 1. நன்மை செய்பவர்களுக்கு நாம் நன்மையே செய்ய வேண்டும்; அதனால், மக்கள் நன்மையைச் செய்ய நாம் பழக்குகிறோம் என்று பொருள்.-கான்பூசியசு[1]
 1. தீமை செய்பவர்களுக்கு தீமையே செய்யுங்கள், அதனால், மக்களை தீமை புரியாதவாறு நாம் தடுத்து விடுகிறோம் என்று பொருள்!-கான்பூசியசு[1]
 1. காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக் கொள்ளவேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
 1. எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக நடக்கக் கூடிய பேர்வழியும், சமயம் வந்தால் சட்டென்று காரியத்தை முடித்தால்தான் வெற்றி காண முடியும்! -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
 1. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
 1. புத்தியுள்ள வில் வீரர்கள் தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்வதற்காக அதனினும் உயரத்தில் உள்ள ஓரிடத்தைக் குறியாக வைத்து அம்பு விடுவார்கள். அது போலவே, புத்திசாலியான மனிதர்கள் தாங்கள் பெரியவர்களைப் போல் காரிய சித்தியடைவதற்காக, முற்காலத்திலிருந்த மிகப் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க முயல்வார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]

பழமொழிகள்[தொகு]

 1. சொல் வேண்டாம்; செயலில் காட்டு - சீனப் பழமொழி
 2. ஒன்றைச் செய்வதற்கு நல்ல காரணம் இல்லையென்றால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் உண்டு -- சீனப் பழமொழி
 1. 1.0 1.1 1.2 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
 2. 2.0 2.1 2.2 2.3 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=செயல்&oldid=20256" இருந்து மீள்விக்கப்பட்டது