மெய்யறிவு
மெய்யறிவு குறித்த மேற்கோள்கள்
- டெல்ஃபி ஆலயத்திலுள்ள அசரீரி, கிரேக்கர்கள் அனைவரிலும் நானே தலைசிறந்த அறிவாளியென்று கூறிற்று. ஏனெனில், கிரேக்கர்கள் அனைவரிலும் நான் ஒருவனே. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்திருக்கிறேன். - சாக்ரடீஸ்[1]
- சுருக்கமான சில சொற்களில் மிகுந்த ஞானம் அடங்கியிருக்கும். - ஸாஃபாகிளிஸ்[1]
- அறிவைச் சரியான முறையில் பயன்படுத்துவது மெய்யறிவு - ஸ்பர்ஜியன்[1]
- ஞானி தான் படைக்கப்பெற்றதன் இலட்சியம் என்ன என்பதை முதலாவதாக ஆராய்ந்து அறிந்துகொள்கிறான். பிறகு, இரண்டாவதாக அதை அடைவதற்குரிய வழியை முடிவு செய்கிறான். வாக்கர்[1]
- மெய்யறிவு பெற்றவர் மூன்று காரியங்களைச் செய்கிறார். உலகம் தம்மைத் துறக்குமுன் தாம் அதைத் துறந்துவிடுகிறார். தாம் சமாதிக்குள் புகுமுன்பே அதைத் தயாரித்து வைக்கிறார். கடவுளின் முன்னிலையை அடையுமுன்பே அவருக்கு உகந்த செயல்களைச் செய்து வருகிறார்.[1]
பழமொழிகள்
[தொகு]- அறிவாளியின் வாழ்க்கையில் ஒருநாள், மூடனின் முழு வாழ்வுக்கும் ஈடாகும். - அரபுப் பழமொழி[1]