உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்கிரட்டீசு

விக்கிமேற்கோள் இலிருந்து
(சாக்ரடீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார்.

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களேயாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது.[1]
  • எல்லா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன.[2]
  • எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.[4]

== அமிதம்

  • மிகப்பெரிய வெள்ளமும் விரைவிலே வடிந்துவிடுகின்றது. மிகவும் கோரமான புயலும் திடீரென்று அமைதியாகி விடுகின்றது. அளவற்ற அன்பும் அவிந்து அடங்குவதில்முடிகின்றது. மிகவும் ஆழ்ந்த ஆசையும் அளவற்ற துவேஷமாக மாறுகின்றது.[5]
  • கோள் சொல்பவன் புறங்கூறுவோனுக்குச் செவி சாய்க்க வேண்டாம்; அவன் மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது போலவே உன்னிடத்தும் அடுத்த தடவை செய்வான்.[6]
  • அழகு சிறிதுகாலம் நிலைத்திருக்கும் ஒரு கடுமையான ஆட்சி.[7]
  • நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள்.[8]
  • தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.[9]
  • காலியாயுள்ள தோல் பைகளைக் காற்று புடைக்கச் செய்யும்: மூடர்களை அபிப்பிராயம் புடைக்கச் செய்யும்.[10]
  • இறைவனை நான் அகத்தில் அழகுடன் விளங்க அருள்வாய் என்று வேண்டிக்கொள்கிறேன்.[7]
  • உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.[11]
  • மனிதன் தானாக உழைத்துப் பழகிக் காய்த்துப் போயிருக்க வேண்டும். இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவை உடலுக்கும் நன்மை செய்வதில்லை. மனத்தின் அறிவுக்கும் உதவுவதில்லை.[12]
  • ஒரு பணக்காரன தன் செல்வத்தால் செருக்குற்றிருக்கிறான். அவன் அந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்கிறான் என்பது தெரியும்வரை, நாம் அவனைப் புகழக்கூடாது.[13]
  • மிகக் குறைந்ததைக்கொண்டு திருப்தியடையவனே முதன்மையான செல்வன். ஏனெனில், இயற்கையின் செல்வம் திருப்திதான்.[13]
  • உன்சொற்கள் எப்படி இருக்கின்றனவோ. அந்த அளவுக்கு உன் அன்பு மதிக்கப்பெறும் உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். [14]
  • புறத் தோற்றத்தில் நாம் தோன்ற விரும்புவது போலவே உண்மையாகவும் இருந்துவிட வேண்டும். அதுவே உலகில் நாம் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்ற சுருக்கு வழி. அடிக்கடி உபயோகிக்கும் அநுபவத்தின் மூலமே மானிடப் பண்புகள் வலிமை பெறுகின்றன.[15]
  • கண்ணியமான புகழுக்கு எது வழியென்று சாக்ரடீஸிடம் கேட்ட பொழுது, அவர் கூறியதாவது: 'நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடப் பயிற்சிசெய்.'[16]
  • நீதிக்குப் பொருத்தமாயுள்ளது சட்டங்களுக்கும் பொருத்தமாயிருக்க வேண்டும்.[17]
  • தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும்.[18]
  • நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார்.[19]
  • புகழ், வீரச் செயல்களின் நறுமணம்.[20]
  • டெல்ஃபி ஆலயத்திலுள்ள அசரீரி, கிரேக்கர்கள் அனைவரிலும் நானே தலைசிறந்த அறிவாளியென்று கூறிற்று. ஏனெனில், கிரேக்கர்கள் அனைவரிலும் நான் ஒருவனே. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்திருக்கிறேன்.[21]
  • கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார்.[22]
  • வாழ்க்கையின் இலட்சியம் இறைவனைப் போன்றிருந்தால், இறைவனைப் பின்பற்றும் ஆன்மா அவனைப் போலவே இருக்கும்.[23]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 37-38. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 16-18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 38-39. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. 7.0 7.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 197-198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188-189. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. 13.0 13.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198-199. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 31-32. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 247. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 305-306. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வழிபாடு. நூல் 34- 35. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 312. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாக்கிரட்டீசு&oldid=35803" இலிருந்து மீள்விக்கப்பட்டது