விதி
Appearance
விதி (Fate) என்பது வாழ்வின் நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கபட்டவை என்ற கருத்தாக்கம்.
மேற்கோள்கள்
[தொகு]- மனித விவகாரங்களின் போக்கைச் சிந்தித்துப் பார்த்தால், பல விஷயங்கள் கிளம்புவதையும், அவற்றை நாம் எதிர்த்து காக்கவிடாதபடி வானத்து விதி செய்து விடுவதையும் காணலாம். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- பட்டு வியாபாரத்தைப் பற்றியோ, கம்பளி வியாபாரத்தைப் பற்றியோ அல்லது லாப நட்டக் கணக்குளைப் பற்றியோ பேசாமல் அரசியலைப் பற்றிப் பேச வேண்டும் என்று எனக்கு விதி வகுத்திருக்கிறது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- எலா விஷயங்களும் விதியின்படி நடப்பவை. ஆனால், குருடாயுள்ள ஏழை மனிதன் அந்தச் சங்கிலியில் ஒரு பகுதியை மட்டுமே காண முடிகின்றது. அவனுக்கு அருகிலுள்ளதுதானே கண்ணிற்படும்!ஆனால், எல்லாவற்றிற்கும் மேலே சமநிலையில் அமைதியாக நிற்கும் தராசு முனையை அவன் பார்ப்பதில்லை. - டிரைடன்[2]
- எலாம் படைக்கப்பெற்றவை. எல்லாம் முறைப்படி நடைபெறுகின்றன. எனினும், நமது வாழ்நாளில், நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகின்றது. - கதே[2]
பழமொழிகள்
[தொகு]- விதியை மதியால் வெல்லலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.