வினைத்திட்பம்
Appearance
வினைத்திட்பம் என்பது மேற்கொண்ட காரியத்தை செய்து முடிக்கும் மன உறுதி ஆகும். இது குறித்த மேற்கோள்கள்
- தளராத நரம்பு, மாறாத பார்வை, சிதறாத சிந்தனை, தயங்காத குறிக்கோள் - இவைகளே வெற்றிக்குரிய ஆசிரியர்கள். - பழைய வாக்கியம்[1]
- ஒரு தோல்வியைக் கண்டு, நீ நிறைவேற்றக் கருதியதைக் கைவிட வேண்டாம். - ஷேக்ஸ்பியர்[1]
- நான் வழியைக் கண்டுபிடிப்பேன் அல்லது நானே வழியை உண்டாக்கிக்கொள்வேன். - சர் பி. ஸிட்னி[1]
- பெரிய காரியங்கள் வல்லமையால் நிறைவேறவில்லை. விடாமுயற்சியாலேயே நிறைவேறியுள்ளன. - ஜான்ஸன்[1]
- எதிலும் கஷ்டமில்லை. தேடினால் அகப்படும். - ஹெர்ரிக்[1]
- வெற்றிக்குரிய நிபந்தனைகள் எளிதானவை. நாம் ஓரளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்; எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் பின்புறம் திரும்பிப் போய்விடக்கூடாது. - ஸிம்ஸ்[1]
- பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே மகுடம் சூட்டப்பெறும். - ஹெர்டர்[1]
- வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம்;
மற்றைய எல்லாம் பிற. - திருவள்ளுவர்[1]
- கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது
தூக்கம் கடிந்து செயல். - திருவள்ளுவர் [1]
- துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. -திருவள்ளுவர்[1]