உள்ளடக்கத்துக்குச் செல்

ஹருகி முராகாமி

விக்கிமேற்கோள் இலிருந்து
நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஹருகி முராகாமி (Haruki Murakami, பிறப்பு ஜனவரி 12, 1949) ஒரு ஜப்பானிய எழுத்தாளர், இவரது புனைவு மற்றும் அபுனைவு படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. "வாழ்ந்துகொண்டிருக்கும் தலைசிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவர்" என ஹருகி முராகாமியை தி கார்டியன் (the guardian) பத்திரிக்கை புகழ்ந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • துன்பம் தவிர்க்க முடியாதது. வருத்தம் தவிர்க்கக் கூடியது.
  • நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
  • மரபும் கலாச்சாரமும் கொண்டாடும் ஜப்பானிலிருந்து தப்புவதன் மூலமே ஜப்பானைப் பற்றி எழுதுகிறேன்.
  • என்னுடைய புத்தகங்கள் வாசகர்களுக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைத்தருகின்றன.நிஜ உலகிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் உணர்வை.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஹருகி_முராகாமி&oldid=13851" இலிருந்து மீள்விக்கப்பட்டது