10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு

விக்கிமேற்கோள் இலிருந்து

10 திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு , கரேன் மக்குல்லா லூட்ஸ் மற்றும் கிர்ஸ்டன் ஸ்மித் எழுதி கில் ஜங்கர் இயக்கி 1999-ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில திரைப்படம். இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகம் தி டேமிங் ஒப் தி ஷ்ரு-ஐ தழுவி , இப்பொழுதைய மேல்நிலைப்பள்ளியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.

உங்களை எவ்வாறெல்லாம் நான் வெறுக்கிறேன்? அவ்வழிகளை நான் கணக்கு செய்கிறேன்.

கத்ரீனா கேட் ச்ற்றாட்போர்ட்[தொகு]

  • நீ என்னிடம் பேசும் முறையை வெறுக்கிறேன் மற்றும் நீ உன் முடியை வெட்டும் முறையை வெறுக்கிறேன்.
    என் மகிழுந்தை நீ ஓட்டும் விதத்தை வெறுக்கிறேன், நீ முறைக்கும் பொழுது வெறுக்கிறேன்.
    உனது பெரிய,முட்டாள்தனமான போர் காலணியை வெறுக்கிறேன் மற்றும் என் மனதை நீ படிக்கும் முறையை வெறுக்கிறேன்.
    எனது உடல்நிலை மோசமாகும் அளவுக்கு உன்னை வெறுக்கிறேன்— சிலசமயம் என்னை ஒலி இயைபு செய்யவும் வைக்கிறது
    நீ என்றுமே சரியாய் இருப்பதை வெறுக்கிறேன். நீ பொய் சொல்லும்பொழுது அதை வெறுக்கிறேன்.
    என்னை சிரிக்க வைக்கும்பொழுது அதை நான் வெறுக்கிறேன்— என்னை அழ வைக்கும்பொழுது மேலும் உன்னை வெறுக்கிறேன்.
    நீ அருகில் இல்லை எனில் அதை வெறுக்கிறேன். நீ என்னை அழைக்கவில்லை எனில் அதை வெறுக்கிறேன்.
    பெரும்பாலும் உன்னை நான் வெறுக்காததை கண்டு வெறுக்கிறேன் — கொஞ்சம் கூட இல்லை, சிறிதளவு கூட இல்லை, இல்லவே இல்லை.



"https://ta.wikiquote.org/w/index.php?title=10_திங்க்ஸ்_ஐ_ஹேட்_அபௌட்_யு&oldid=11513" இலிருந்து மீள்விக்கப்பட்டது