அனடோல் பிரான்ஸ்
Appearance
அனடோல் பிரான்ஸ் (Anatole France] (16 ஏப்ரல் 1844 - 12 அக்டோபர் 1924) என்பவர் பிரெஞ்சு கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் புதின ஆசிரியர் ஆவார்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.[1]
- நாம் கருத்துகளை நிறைய கற்பிக்க வேண்டும். இதுவரை நிகழ்ச்சிகளையே அதிகமாகக் கற்பித்து வந்தோம். [2]
- ஒருவன் சூழ்நிலைகளைத் தொடர்ந்து. தன்னைச் சுற்றியுள்ள சக்திகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொன்னால், செய்யத்தக்கதைச் செய்யவேண்டும்.[3]
- சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே.[4]
- மனிதன் திருந்துவதால் உலக சமாதானம் வரும் என்பதில்லை. ஆனால், புதிய சூழ்நிலைகள், புதிய விஞ்ஞானம். புதிய பொருளாதார அவசியங்கள் ஆகியவை அமைதியை நிலை நாட்டுபவை.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடமை. நூல் 63- 66. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158-159. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.