உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் மேக்பீஸ் தாக்கரே

விக்கிமேற்கோள் இலிருந்து

வில்லியம் மேக்பீஸ் தாக்கரே (18 சூலை 1811 - 24 டதிசம்பர் 1863) ஒரு பிரிட்த்தானிய புதின எழுத்தாளராவார்

மேற்கோள்கள்

[தொகு]
  • அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன.[1]
  • வாழ்க்கை ஆன்மாவின் பயிற்சிக்கூடம்: அதன் காலம் நித்தியமானது.[2]
  • நம் மனத்தைக் கல்வியிடம் ஈடுபடுத்தற்கு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய இரண்டு முக்கிய சக்திகள் புதியதை அறிந்ததாகச் செய்வதும், அறிந்ததைப் புதியதாகச் செய்வதுமாகும்.[3]
  • மனித சமூகம் எப்பொழுதுமே சார்ந்து வாழவே வேண்டியிருக்கிறது. இரக்கமும் தயவும் மற்ற குணங்களைவிட அதிகமாகத் தேவைப்படுகின்றன.[4]
  • நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும்.[5]
  • சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.[6]
  • தெரிந்தவற்றைப் புதியனவாகவும் புதியனவற்றைத் தெரிந்தனவாகவும் செய்யக்கூடிய சக்தியே ஆசிரியனிடத்தில் நம்மை ஈடுபடுத்தும்.[7]
  • இளமைதான். அல்நாஷரைப் போல, இன்பமயமான கனவுகள் காண ஏற்ற காலம்.[8]
  • மேன்மைக்கு அடுத்தபடி அதைப் பாராட்டுதல் மேன்மையாகும்.[9]
  • அநேகமாக எல்லாப் பெண்டிரும் புத்திசாலிகளான கடின இதயமுள்ள மனிதர்களும் நாவலை விரும்புகிறார்கள். நீதிபதிகள், பிஷப்புகள், அமைச்சர்கள், கணித நிபுணர்கள் ஆகியோர்கள் நாவல் படிப்பதில் பிரசித்தமானவர்கள். சிறு பையன்களும் இனிய பெண்களும், அவர்களுடைய அன்பும் அருமையுள்ள தாய்மார்களும் அவைகளைப் படிக்கிறார்கள்.[10]
  • வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே.[11]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 96-97. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 183-184. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்றியறிதல். நூல் 82- 84. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-84. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 264-265. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.