என். எஸ். கிருஷ்ணன்
Appearance
என். எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- இப்போது மக்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ வேண்டுமானால், அந்தப் பணியைச் செய்யும் கலைஞருக்குப்பல துறைகளிலும் தேர்ச்சியும், தெளிந்த அறிவும் வேண்டும் - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வானொலி உரை (1949)[1]
- என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் ’சார்லி சாப்ளின்’ என்று சிலர் அழைக்கிறார்கள். அது அவ்வளவு பொருத்தமல்ல. சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்.[2]
- எழுத்தாளர்கள் தங்கள் பேனவை எப்பேர்பட்ட மையில் தொட்டு எழுதுகிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் ரொம்பவும் ஆச்சரியப்படுவீர்கள். அதாவது, பொறா'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலர் தற்பெரு'மை'யில் தொட்டு எழுதுகிறார்கள். இன்னும் சிலரோ பொய்'மை', பழ‘மை’, கய'மை', அறியா'மை' போன்ற ‘மை'களில் தொட்டு எழுதுகிறாகள். நல்லதகுதியுள்ள எழுத்தாளன், தன் பேனாவை புது‘மை’, 'உண்மை’, பொறு'மை', வறு'மை', உரி'மை'; கட'மை' இத்தகைய மை'களில்தான் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறான்.[3]
நபர் குறித்த மேற்கோள்கள்
[தொகு]- என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார். -எம். ஜி. ஆர். (22-11-1964)[4]
- கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என்று சொன்னார்கள்; அவர் நல்ல சமயத்தில் செத்தார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல எல்லோரும் அந்தந்த நேரத்தில் போய்விடவேண்டும். இருந்துகொண்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. —எம். ஆர். இராதா (31.8-1961)[5]
சான்றுகள்
[தொகு]- ↑ கலைவாணரின் வாழ்வில்.... Retrieved on 29 மே 2016.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.