சிறைச்சாலை
Appearance
சிறைச்சாலை (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ[1][2] உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர்.
சிறைச்சாலை குறித்த கூற்றுகள்
[தொகு]- நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் - ஜவகர்லால் நேரு[3]
- மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை — சுபாஷ் சந்திர போஸ் (20-5-1928, பம்பாயில்)[4]
சான்றுகள்
[தொகு]
- ↑ Fraser, Andrew (2007). "Primary health care in prisons". in Møller, Lars et al.. Health in Prisons: A WHO Guide to the Essentials in Prison Health. WHO Regional Office Europe. ISBN 9789289072809.
- ↑ Drucker, Ernest (2011). A Plague of Prisons: The Epidemiology of Mass Incarceration in America. The New Press. pp. 115–116. ISBN 9781595586056.
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 404
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.