மொழி
Appearance
மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது. -திரு. வி. கலியாணசுந்தரனார் [1]
- நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும். -திரு. வி. கலியாணசுந்தரனார் [1]
- ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும். -திரு. வி. கலியாணசுந்தரனார் [1]
- ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். - ஜான்ஸன்[2]
- கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருப்பதுடன், மொழி சிந்தனை செய்வதற்கும் உதவியான திறம் படைத்த பெரிய கருவியாகவும் விளங்குகின்றது. - ஸர் எக்டேவி[2]
- பேச்சு என்ற வியாபாரத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள். = ஜோபர்ட்[2]
- மொழி ஒரு புனிதமான பொருள். அது வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வருவது. வாழ்க்கையின் வேதனைகள். இன்பங்கள். அதன் தேவைகள். அயர்வுகள் ஆகியவற்றில் அது உருவாகின்றது. ஒவ்வொரு மொழியும் அதைப் பேசி வரும் மக்களுடைய ஆன்மா எழுந்தருளியிருக்கும் ஆலயமாகும். _ ஆ. வே. ஹோம்ஸ்[2]
சான்றுகள்
[தொகு]