உள்ளடக்கத்துக்குச் செல்

மொழி

விக்கிமேற்கோள் இலிருந்து

மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். - ஜான்ஸன்[2]
  • கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருப்பதுடன், மொழி சிந்தனை செய்வதற்கும் உதவியான திறம் படைத்த பெரிய கருவியாகவும் விளங்குகின்றது. - ஸர் எக்டேவி[2]
  • நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன. - வால்டர்[2]
  • அந்நிய மொழிகளை அறியாத மனிதன் தன் சொந்த மொழியையும் அறியான். - கதே[2]
  • பேச்சு என்ற வியாபாரத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள். = ஜோபர்ட்[2]
  • மொழி ஒரு புனிதமான பொருள். அது வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வருவது. வாழ்க்கையின் வேதனைகள். இன்பங்கள். அதன் தேவைகள். அயர்வுகள் ஆகியவற்றில் அது உருவாகின்றது. ஒவ்வொரு மொழியும் அதைப் பேசி வரும் மக்களுடைய ஆன்மா எழுந்தருளியிருக்கும் ஆலயமாகும். _ ஆ. வே. ஹோம்ஸ்[2]

சான்றுகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 306-307. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மொழி&oldid=35696" இலிருந்து மீள்விக்கப்பட்டது