மாணவர்
Appearance
மாணவன் அல்லது மாணவி (student) என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார்.
- மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.[1]
- மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. - திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
- ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.
- பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். - திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
சான்றுகள்
[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118.