மாணவர்

விக்கிமேற்கோள் இலிருந்து
மாணவர்

மாணவன் அல்லது மாணவி (student) என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார்.

  • மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார்.[1]
  • மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. - திரு. வி. கலியாணசுந்தரனார்[1]
  • ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும்.
  • பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். - திரு. வி. கலியாணசுந்தரனார்[1]

சான்றுகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மாணவர்&oldid=38171" இலிருந்து மீள்விக்கப்பட்டது