உடை

விக்கிமேற்கோள் இலிருந்து

மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை (clothing, clothes, attire) எனலாம். உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன.

மேற்கோள்கள்[தொகு]

  • உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை. -திரு. வி. கலியாணசுந்தரனார் [1]
  • எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின.[1]
  • நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு; உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம்.- இரா. நெடுஞ்செழியன்[2]
  • ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான பொருள் புடவைதான். அதிக அளவு கெளரவமான பொருளும் அதுதான்.—மரியா தெரேசா (15-12-1964) (புராதன போர்பன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி)[3]
  • வெளியே நாகரிகமான உடை அணிந்துகொள்வது நமக்கு அவசியமில்லாவிட்டாலும். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகும் மூடனை அது மேலும் வெறுக்கச் செய்வதாயிருப்பினும், நமது மதிப்பை அதிகப்படுத்துவதாகும். - டேவிட் பால் பிரௌன்[4]
  • உனது திருப்திக்காக உணவருந்து. ஆனால், பிறருடைய திருப்திக்காக உடை அணிந்துகொள். -ஃபிராங்கலின்[4]
  • கிரீடந்தரித்த சக்கரவர்த்திக்குரிய மரியாதையில் பாதிகூட வெறும் தொப்பியணிந்த சக்கரவர்த்திக்குக் கிடைக்காது. - கோல்டு ஸ்மித்[4]
  • உடை விஷயங்களில் நான் ஒருவருக்குச் சொல்லக்கூடியது இதுதான் புது மாதிரியான உடைகள் அணிவதற்கு நீங்கள் முதல்வராக நிற்க வேண்டாம்; அப்படி அணியாதவர்களுள் கடைசியாகவும் நிற்க வேண்டாம்.[4]
  • வீட்டு இன்பங்களும் வசதிகளும் தீர்ந்து போகும் அளவுக்கு நாம் உடைகளுக்காகத் தியாகம் செய்கிறோம். -கௌப்பர்[4]

பழமொழிகள்[தொகு]

  • உடல், ஆன்மாவின் மேல் தோடு, உடை அந்தத் தோட்டின் மேலுள்ள உமி. ஆனால், உமி அதனுள் என்ன இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது. பழ வழக்கு[4]
  • ஆள் பாதி ஆடை பாதி

சான்றுகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உடை&oldid=20351" இலிருந்து மீள்விக்கப்பட்டது