வெண்டெல் பிலிப்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
.

வெண்டெல் பிலிப்ஸ் (Wendell Phillips) (நவம்பர் 29, 1811 - பிப்ரவரி 2, 1884) என்பவர் ஒரு அமெரிக்க அடிமை ஒழிப்புவாதி, பூர்வீக அமெரிக்கர்களுக்காக வாதாடியவர், சொற்பொழிவாளர் மற்றும் வழக்கறிஞராவர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

அனுபவம்[தொகு]

  • அநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம்: ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால், அவனை ஆலோசனையில்லாதவன் என்று சொல்ல முடியாது.[1]

ஆற்றல்[தொகு]

  • பலர் கையிலுள்ள அதிகாரம் சிலர் கையில் போய்க் குவிந்து கொண்டே இருக்கும். பொதுமக்களின் சுதந்தரத்தில் நாள்தோறும் கண்ணும் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அது உளுத்துப்போகும்.[2]

கடவுள்[தொகு]

  • ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.[3]

கருத்து[தொகு]

  • நேற்று நான் சொன்னவைகளுக்கெல்லாம் மாறுபாடாயிருப்பினும், இன்று நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்லியே தீருவேன்.[4]

பத்திரிக்கையாளர்[தொகு]

  • நாம் மனிதர்களும் பத்திரிகைகளும் நடத்தும் ஆட்சியின்கீழ் வாழ்கிறோம்.[5]

குறிப்பு[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வெண்டெல்_பிலிப்ஸ்&oldid=25419" இலிருந்து மீள்விக்கப்பட்டது