வெண்டெல் பிலிப்ஸ்
Appearance
வெண்டெல் பிலிப்ஸ் (Wendell Phillips) (நவம்பர் 29, 1811 - பிப்ரவரி 2, 1884) என்பவர் ஒரு அமெரிக்க அடிமை ஒழிப்புவாதி, பூர்வீக அமெரிக்கர்களுக்காக வாதாடியவர், சொற்பொழிவாளர் மற்றும் வழக்கறிஞராவர்.
இவரது மேற்கோள்கள்
[தொகு]- அநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம்: ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால், அவனை ஆலோசனையில்லாதவன் என்று சொல்ல முடியாது.[1]
- பலர் கையிலுள்ள அதிகாரம் சிலர் கையில் போய்க் குவிந்து கொண்டே இருக்கும். பொதுமக்களின் சுதந்தரத்தில் நாள்தோறும் கண்ணும் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அது உளுத்துப்போகும்.[2]
- ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.[3]
- நேற்று நான் சொன்னவைகளுக்கெல்லாம் மாறுபாடாயிருப்பினும், இன்று நான் எதை நம்புகிறேனோ அதைச் சொல்லியே தீருவேன்.[4]
- நாம் மனிதர்களும் பத்திரிகைகளும் நடத்தும் ஆட்சியின்கீழ் வாழ்கிறோம்.[5]
குறிப்பு
[தொகு]- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கடவுள். நூல் 30- 34. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.