சீர்திருத்தம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சீர்திருத்தம் என்பது தற்போது உள்ள நிலையை விட மேம்படுத்தும் ஒரு மாற்றும் ஆகும். அதாவது தவறுகள், துஷ்பிரயோகங்களை நீக்கும் ஒரு நடவடிக்கையாகும். குறிப்பாக, தூய அசல் நிலைக்கு மாறுதல், சரிசெய்தல், மீட்டமைத்தல் என்பதாகும். சீர்திருத்தம் பொதுவாக புரட்சியிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • என்போதும் ஆபத்தில் சிக்காமல் வாழ்க்கை நடத்த விரும்புகிறவர்கள், சரணாகதியைக் கடவுளாக வழிபடுபவர்கள், உலகத்தை சீர்திருத்த முடியாது. உலகத்தின் இன்பங்களை, தனக்குரிய பங்கைக் காட்டிலும் கூடுதலாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மாற்றத்தின் தூதர்களாக முடியாது. அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள். -ஜவகர்லால் நேரு
    • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[1]
  • நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது. — தொழிலதிபர் ஹென்றி போர்டு[2]
  • ஒவ்வொரு வருடமும் ஒரு தீய வழக்கத்தைக் களைந்துவந்தால், நாளடைவில் மிகவும் இழிவான மனிதன்கூட நல்லவனாகி விடுவான். ஃபிராங்க்லின்[3]
  • அவசியம், ஏழைகளைத் திருத்துகின்றது. தெவிட்டுதல் செல்வர்களைத் திருத்துகின்றது. - டாஸிடன்[3]
  • நாம் ஆயிரக்கணக்கான நற்பண்புகளைப் பெறுதல் எளிது. ஆனால், ஒரு குற்றத்தைத் திருத்திக்கொள்வது அரிது. -புருயொ[3]
  • நரகத்திலிருந்து ஒளிமயமான பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால், வழி நீளமாயும் கஷ்டமாயுமே இருக்கும் -மில்டன்[3]
  • ஒரு மனிதனை நீ சீர்திருத்த வேண்டுமானால், அவனுடைய பாட்டியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். - விக்டர் ஹியூகோ[3]

குறிப்புகள்[தொகு]

  1. அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6. 
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 184-185. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சீர்திருத்தம்&oldid=21379" இலிருந்து மீள்விக்கப்பட்டது