விக்டர் ஹியூகோ
Appearance
விக்டர்-மாரீ ஹியூகோ (Victor Hugo, பெப்ரவரி 26, 1802 - மே 22, 1885) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், காட்சிக் கலைஞரும், அரசியலாளரும், மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார். இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- எழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும்.
- உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே !
- தனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது.
- கடலினும் பெரிய காட்சி வானுடையது ;வானினும் பெரிது மனித ஆன்மாவின் உள் வெளிச்சம்.
- சர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால்,புரட்சி எங்களின் தார்மீக உரிமை.
- களையென்று எதுவும் இல்லை ; பயனற்ற மனிதர்கள் என்று யாருமில்லை ;மோசமான விவசாயிகள் மட்டுமே உள்ளனர்
- ஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான்.[1]
- ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும்.[2]
- நயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை.[3]
- மனிதர்கள், பெண்களின் விளையாட்டுக் கருவிகள்: பெண் சைத்தானின் விளையாட்டுக் கருவி.[3]
- மனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர்; பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர். - விக்டர் ஹியூகோ[3]
- சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 269-270. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
புற இணைப்புகள்
[தொகு]