குழந்தை

விக்கிமேற்கோள் இலிருந்து

குழந்தை அல்லது கைக்குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையை குறிக்கும். இது குறித்த மேற்கோள்கள்

  • காலை நேரம் ஒரு நாளைக் காட்டுவது போல, குழந்தை பின்னால் வளரும் மனிதனைக் காட்டுகின்றது. - மில்டன்[1]
  • இழந்தைகளைக் குறை சொல்வோரைவிட அவர்களுக்கு வழி காட்டுவோரே அதிகமாகத் தேவை. - ஜோபர்[1]
  • பல குழந்தைகள், பல கவலைகள் குழந்தைகள் இல்லை رமகிழ்ச்சியும் இல்லை. -போவீ[1]
  • ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், பாக்கியமற்றவன் என்று சொல்ல வேண்டாம். -கதே[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 162. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குழந்தை&oldid=20999" இலிருந்து மீள்விக்கப்பட்டது