ஜான் மில்டன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
John Milton - Project Gutenberg eText 13619.jpg

ஜான் மில்டன் (John Milton 6 திசம்பர் 1608--8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது.

இவரது மேற்கோள்கள்[தொகு]

கல்வி[தொகு]

  • சொந்தக் காரியம் பொதுக் காரியம் எல்லாவற்றையும் நியாயமாயும் சாமர்த்தியமாயும் பெருந்தன்மையாயும் செய்யக் கற்றுக் கொடுப்பதே பரிபூரணமான கல்வியாகும்.[1]

கவிதை[தொகு]

  • உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.[2]

செல்வம்[தொகு]

  • அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.[3]

நேர்மையின்மை[தொகு]

  • உலகில் யாரும் அறியாதபடி உலவும் தீமை வஞ்சக நடை ஒன்றே. அதை ஆண்டவன் மட்டுமே அறிவான்.

நூல்கள்[தொகு]

  • நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும்.[4]
  • மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை—ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை—ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.[4]

பழிவாங்குதல்[தொகு]

  • பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும். ஆனால், சிறிது போதில் கசப்பாக மாறிவிடும். அது எய்தவனையே திரும்பிவந்து கொல்லும் அம்பாகும்.[5]

மன நிறைவு[தொகு]

  • மனம் கொண்டது மாளிகை; நரகத்தைச் சொர்க்க மாக்குவதும் சொர்க்கத்தை நரகமாக்குவதும் அதுவே.[6]

வஞ்சகம்[தொகு]

  • நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.[7]

வீடுபேறு[தொகு]

  • அறம் விரும்பு; அதுவே வீடு.[8]

சான்றுகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 4.0 4.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழிவாங்குதல். நூல் 75- 76. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மோட்சம். நூல் 36- 37. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_மில்டன்&oldid=16996" இருந்து மீள்விக்கப்பட்டது