கப்பலோட்டிய தமிழன்
கப்பலோட்டிய தமிழன் என்பது 1961 இல் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இது இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம்பிள்ளை பற்றிய திரைப்படமாகும்.
திரைப்படம் குறித்த மேற்கோள்கள்
[தொகு]'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்திற்கு கடைசிவரை பக்தவச்சலம் அரசு வரிச்சலுகை தர மறுத்துவிட்டது: ஏன் என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது. 'கப்பலோட்டிய இந்தியன் என்றல்லவா படத்திற்குப் பெயர் இருந்திருக்கவேனும்; அதென்ன 'தமிழன்' மண்ணாங்கட்டி'. சரி தொலையுது என்று வைத்துக் கொண்டாலும், படம் முடியப் போகும் போது வரிசையாக - வ.உ.சியைப் போல இவர்களும் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்கள்தான் என்ற வரிசையில் தோழர் ஜீவானந்தத்தின் படத்தையுமல்லவா காட்டுகிறார்கள்! (குடிகெட்டுப்போச்சே). இந்த விடுதலைப் பொன்விழா ஆண்டில் எனக்கு இதெல்லாம் காரணம் இல்லாமல் ஞாபகத்துக்கு வந்து தொலைகிறது. -கி. ராஜநாராயணன் அவர்களின் பதிவுகள் என்ற நூலிலிருந்து.