அடிமைமுறை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

அடிமைமுறை என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை கட்டாயமாக வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இப்படி வலுக்கட்டாயம் செய்யப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருட்களைப் போல வாங்கி, விற்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • மனிதனை எது அடிமையாக்குகின்றதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகின்றது. - போப்[1]
  • சுதந்தரமாயிருந்து பின் ஒழுங்கீனமானவர்களே அடிமைகளில் கடையானவர்களாய் இருக்கிறார்கள். - கார்ரிக்[1]
  • அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும். - பிளேட்டோ[1]
  • அடிமை முறை அக்கிரமமும் கொள்ளையுமாகும் - சாகரடீஸ்[1]
  • தன் மனத்தைச் சுதந்தரமாக வைத்துக்கொள்பவன் எவனும் அடிமையில்லை. - டைரியஸ் மாக்ஸிமர்[1]
  • ஆங்கிலேயர் ஒருபோதும் அடிமைகளாய் இருக்க மாட்டார்கள் அரசாங்கமும், பொது மக்கள் அபிப்பிராயமும் அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு, சுதந்தரம் இருக்கின்றது. -பெர்னார்டு ஷா[1]
  • மனிதன் தான் அடிமையாகும் தினத்திலேயே தன் ஒழுக்கத்தில் பாதியை இழந்துவிடுவான் . என்று ஹோமர் கூறியுள்ளார். மனிதன் அடிமைகளை வைத்து வேலைவாங்கத் தொடங்கினால், ஒழுக்கத்தில் பாதிக்கு மேலானதை இழந்து விடுவான் என்பதையும் அவர் சேர்த்துக் சொல்லியிருக்கலாம். - வேட்லி[1]
  • அடிமை முறை மாபெரும் ஒழுக்கக்கேடு. அரசியல் சாபத்திடு என்று நான் இளமையிலிருந்தே கருதி வந்திருக்கிறேன். அது அநீதியானது மனித சமூகத்தின் இயற்கையான சமத்துவத்திற்கு விரோதாரமானது; அது அதிக வல்லமையை மட்டும் ஆதாரமாக்க் கொண்டது என்று நான் கருதுகிறேன்: மெலியாரை வலியார் வென்று நிரந்தரமாக ஆண்டு அடக்குவதாகும். - ஆண்டான்களும் அடிமைகளும்) வெவ்வேறு இனத்தவர்கள் என்று போலிக்காரணம் காட்டுவதையும் நான் கண்டித்திருக்கிறேன். கறுப்பு இனத்தார் (நீக்ரோக்கள்) பலவீனமாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்யக்கூடாது என்பதற்கே அது ஏற்ற காரணம் என்றும் நான் சொல்லியிருக்கிறேன். - டேனியல் வெப்ஸ்டர் (Daniel Webster)[1]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 16-18. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அடிமைமுறை&oldid=18985" இருந்து மீள்விக்கப்பட்டது