ரால்ப் வால்டோ எமேர்சன்

விக்கிமேற்கோள் இல் இருந்து
(எமர்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ரால்ப் வால்டோ எமேர்சன்

ரால்ப் வால்டோ எமேர்சன் (Ralph Waldo Emerson ) (மே 25, 1803 – ஏப்ரல் 27, 1882) என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" (Transcendentalism) என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

 • காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில்தான் கவிதை தோன்றியிருக்க வேண்டும்.
 • நமது அறிவுத் திண்மையும் செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலே.
 • பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது.
 • நான் மேற்கோள்களை வெறுப்பவன்; உனக்குத் தெரிந்ததைக் கூறு.
 • நீ முடிவெடுத்த உடனே, இந்த அண்டமே அதை நடத்திக்காட்ட தயாராகிவிடுகின்றது.
 • நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள்.
 • உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள்; பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும்.
 • ஒவ்வொரு பேரறிவு-மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும். In every work of genius we recognize our own rejected thoughts; they come back to us with a certain alienated majesty.
 • மறுசிந்தனையே சிறந்த சிந்தனை
 • ஒரு காலத்திய மதம் அடுத்த காலத்தின் இலக்கிய பொழுதுபோக்காகிறது.
 • சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்.
 • திறமைதான் ஏழையின் மூலதனம்.
 • நூலகம் ஒரு மாயக்கூடம், அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன.
 • நாம் விருந்துக்குப் போகும் போது உடுத்த வேண்டிய மிகச் சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை.
 • நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை.[1]

அறம்[தொகு]

 • நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.[2]

அறிவு[தொகு]

 • கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்![3]
 • பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே.[3]

ஆன்மா[தொகு]

 • ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.[4]

இசை[தொகு]

 • இசையே ஏழைகளின் கலா சொர்க்கம்.[5]

உதவி[தொகு]

 • பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.[6]

கவிதை[தொகு]

 • கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.[7]

சான்றோர்[தொகு]

 • சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே.[8]
 • பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார். -[8]
 • உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.[8]

சொற்கள்[தொகு]

 • இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.[9]

நாகரிகம்[தொகு]

 • ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.[10]
 • நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.[10]
 • நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.[10]

நேர்மையின்மை[தொகு]

 • நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.[11]

சான்றுகள்[தொகு]

 1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
 2. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
 3. 3.0 3.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 5. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 6. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 8. 8.0 8.1 8.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 10. 10.0 10.1 10.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
 11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: