உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்ட்ரண்டு ரசல்

விக்கிமேற்கோள் இலிருந்து
Bertrand Russell 1907

பெர்ட்ராண்ட் ஆர்தர் வில்லியம் ரஸ்ஸல், 3ஆவது "ஏர்ல்" ரசல் (Bertrand Arthur William Russell, 3rd Earl Russell,1872-1970): ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மனிதர்கள். விஞ்ஞான முன்னேற்றம் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்குமென்று சில சமயங்களில் பேககின்றனர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த மயக்கங்களுள் ஒன்று. அறிவு பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்தக் கருத்து தள்ளப்பெற வேண்டும்.[1]
  • சர்வதேசக் குழப்பம் ஏற்படுவதற்கு அடிப்படையாக உள்ள மனிதர்கள் அச்சத்திற்கும் துவேஷத்திற்கும் இடம் கொடுப்பதாகும். பொருளாதாரத்தகராறுகளுக்கும் இதுவே அடிப்படை பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் ஆசைக்கும் அச்சமே காரணம். மனிதர்கள் ஆதிக்கம் பெற விரும்புகின்றனர். ஏனெனில், மற்றவர்களுடைய ஆதிக்கம் தங்களுக்கு எதிராக அநீதியாக உபயோகிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.[2]
  • சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் சமுதாயம் வாழ முடியாது. தீவிரமாகச் சட்டத்தை மீறி மேற்செல்பவர்கள் இல்லாமல் சமுதாயம் முன்னேறவும் முடியாது.[3]
  • மூளையால் வேலை செய்யும் அறிவாளி. சமூகத்தில் செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருந்தால், அது இதுதான் அவர் பாரபட்சமின்றி, தாமும் உணர்ச்சி வெறி கொள்ளும்படி ஏற்படும் தூண்டுதலை விலக்கிவிட்டு, அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். போர் நடக்கும் பொழுது, சிக்கனம், பொது சுறுசுறுப்பு. நன்மைக்கு உழைத்தல் போன்ற சாதாரணப் பண்புகள் கூட போரில் அழிவுவேலைகளைப் பெருக்கி, இருகட்சியினரும் ஒருவரையொருவர் வதைத்துக்கொள்ள அதிக ஆற்றலை உண்டாக்கப் பயன்படுத்தப்பெற்றன.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 313-314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 93-95. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெர்ட்ரண்டு_ரசல்&oldid=37129" இலிருந்து மீள்விக்கப்பட்டது