உள்ளடக்கத்துக்குச் செல்

அவசியம்

விக்கிமேற்கோள் இலிருந்து

அவசியம் (Necessity) என்பது தவிர்க்க முடியாத, அல்லது முற்றிலும் தேவைப்படக்கூடியது என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய தலைசிறந்த ஆசிரியர் அவசியம் என்பதுதான். -லாநோன்[1]
  • அவசியமே புதுக்கண்டுபிடிப்புகளுக்குத் தாயாகும். -ஃபார்குஹர்[1]
  • விதியையும் அவசியத்தையும் நாம் வெல்ல முடியாது. -லாண்டர்[1]
  • செயலுக்கு அவசியம் நேர்ந்தால், அச்சம் போய்விடும் தைரியமான உறுதி தோன்றி, அதிருஷ்டத்திற்கு ஆதரவாகின்றது. -குவார்லெஸ்[1]
  • அவசியம் என்பது மனிதனின் பலவீனத்திற்கு அடைக்கலமும் மன்னிப்புமாகும்: அது சட்டங்கள் அனைத்தையும் ஊடுருவி: சென்றுவிடும். வேறு வழியின்றி, அவசியத்தால் ஒருவன் பிழைசெய்தால், அவன் குற்றவாளியாகான். - பாஸ்கல்[1]
  • அவசியந்தான் எப்பொழுதும் தொழிலுக்கு முதல் தூண்டுகோல் அதைக் கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் ஆற்றலுடனும் பயன்படுத்துவோர் தோல்வியடைவது அரிது - சாமுவேல் ஸ்மைல்ஸ்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 51-52. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அவசியம்&oldid=19442" இலிருந்து மீள்விக்கப்பட்டது