இன்பம்
Appearance
இன்பம் (happiness) என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும். - சோ. ந. கந்தசாமி
- அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். - வாசிங்டன் இர்விங்
- இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். - அரிஸ்டாட்டில்
- கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்! - ரஸ்கின் பாண்ட்
- இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும். - பெ. சுந்தரம் பிள்ளை
- இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதீர்கள்; அப்படி, நீங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக உங்களது கைப்பிடிக்குள் அகப்படாது. -கான்பூசியசு[1]
- தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் எண்ணிலாலன்றி ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது. - மார்க்கஸ் அன்டோனியஸ்[2]
- இன்பத்தை ஒழுக்கத்தின்மீதுதான் அமைக்க முடியும். அடிப்படையில் சத்தியம் இருக்க வேண்டும். - காலெரிட்ஜ்[2]
- இன்பம் நமக்கு உள்ளே மட்டும் இருப்பதில்லை. அல்லது வெளியே இருப்பதில்லை; அது இறைவனுடன் நாம் ஐக்கியப்படுவதாகும்.[2]
- நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தன்று. நாம் எவ்வளவை அனுபவிக்கிறோம் என்பதைப் பொறுத்தது நம் இன்பம் - ஸ்பர்ஜியன்[2]
- வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம். - ஹம்போல்ட்[2]
- இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. - அகஸ்டின்[2]
- எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். - ஹிரோடோட்டஸ்[2]
- இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் - பீச்சர்[2]
- பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும் மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. -லாண்டன்[2]
- எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். -கதே[2]
- உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். புளுடார்க்[2]
- இடமும், நிலைமையும் முக்கியமல்ல; மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது. - லா எஸ்டிரேஞ்ச் [2]
வெளியிணைப்புக்கள்
[தொகு]