இயற்கை
Jump to navigation
Jump to search
இயற்கை (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம்.
மேற்கோள்கள்[தொகு]
- இயற்கையும் அறிவும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை கூறுகின்றன. - ஜுவினல்[1]
- இயற்கையின் விதிகள் நீதியானவை; ஆனால், பயங்கரமானவை. - லாங்ஃபெல்லோ[1]
- இயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. -பாஸ்கல்[1]
- முன்னேறுவதிலும், வளர்ச்சியிலும் இயற்கைக்கு ஓய்வே இல்லை. செயலின்மை அனைத்தையும் அவள் சபித்து விடுகிறாள். -கதே[1]