உள்ளடக்கத்துக்குச் செல்

இறைமறுப்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

இறைமறுப்பு அல்லது நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.

மேற்கோள்கள்[தொகு]

 • தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும். பேக்கன்[1]
 • கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும். பேக்கன்[1]
 • நாத்திகம், வாழ்க்கையைக்காட்டிலும் இதயத்திலேயே உள்ளது. -பேக்கன்[2]
 • சொற்பமான தத்துவஞானம் மனிதர்களின் மனங்களை நாத்திகத்தின்பால் செலுத்தும் ஆனால், ஆழ்ந்த ஞானம் அம் மனங்களைச் சமயத்தின்பால் செலுத்தும். -பேக்கன்[2]
 • நிரீச்வர வாதம் தத்துவ சாஸ்திரியின் தவறேயன்றி மனித இயல்பின் தவறன்று. பான்கிராப்ட்[1]
 • நல்லோர் வருந்தல் - தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம். ட்ரைடன்[1]
 • நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு. அடிஸன்[1]
 • பாவங்களுக்கெல்லாம் அடிப்படை இறை நம்பிக்கையின்மை -பார்ரே[3]
 • பெற்றோர்களுக்கும். குழந்தைகளுக்கும். அரசர்களுக்கும். குடிகளுக்கும் ஒற்றுமையைப் புனிதமாக்கி உறுதி செய்வது இறை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமை ஒவ்வொரு பந்தத்தையும் அறுத்துவிடுகின்றது. - பெஸ்டலோஜி[3]
 • பொதுவாக, இஷ்டடம் போல் சிந்திப்பவர்கனே எதையும் சிந்தியாதவர்களாயிருக்கின்றனர். - ஸ்டெர்னி[3]
 • இறை நம்பிக்கையின்மையால் ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈடாக அது எதையும் அளிப்பதில்லை. -சால்மர்ஸ்[3]
 • நாதிகம் நம்பிக்கையின் மரணம்: ஆன்மாவின் தற்கொலை.[2]
 • நெருக்கடியான ஆபத்துக் காலத்திலும் ஒரு தெய்விக சக்தியை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதமுள்ளவர் சிலரே இருப்பர். - பிளேட்டோ[2]
 • நல்லொழுக்கமுள்ளவர்கள் கஷ்டமடைவதும், தீமை வெற்றி பெறுவதும் மனித சமூகத்தில் நாத்திகர்கள் பெருகக் காரணமா யுள்ளன. - டிரைடன்[2]
 • நாத்திகம் ஒரு பிணி என்று பிளேட்டோ கூறுவது சரிதான். -ஆர். டி. ஹாகான்[2]
 • உடற்கூறுபற்றிய நூலைப் பயில்பவன் எவனும் நாத்திகனாயிருக்க முடியாது. - ஹெர்பெர்ட் பிரபு[2]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 1. 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம். நூல் 37. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236-237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 3. 3.0 3.1 3.2 3.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 110. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இறைமறுப்பு&oldid=21865" இலிருந்து மீள்விக்கப்பட்டது