உலகம்
Jump to navigation
Jump to search
உலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- நாம் வசிக்கும் இந்த உலகம் அழகானது. அருள் பெற்றது உயிருள்ளவரை இதை அனுபவிப்பதை இழந்துவிடுதல் பாவமாகும். --சேம்பர்ஸ்[1]
- உலகை நம்பாதே. அது வாக்களிப்பதை ஒரு போதும் அளிப்பதில்லை. -அகஸ்டின்[1]
- ‘உலகம்' என்பது ஒரு சங்கேதச் சொல். அதன் பொருள் அதிலுள்ள அயோக்கியத்தனம் அனைத்தும் - டிக்கென்ஸ்[1]
- உலகம் என்ற நாட்டைப்பற்றி விளக்கத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியாது: ஒருவர் தாம் அதில் யாத்திரை செய்து பழகியே தெரிந்துகொள்ளல் வேண்டும். -செண்டர்ஃபீல்ட்[1]
- சிந்தனை செய்பவர்களுக்கு உலகம் ஓர் இன்பியல் நாடகம். அதை உணர்பவர்களுக்குத் துன்பியல் நாடகம்,-ஹோரேஸ் வால்போல்[1]