உள்ளடக்கத்துக்குச் செல்

கலைஞர்

விக்கிமேற்கோள் இலிருந்து

இந்தக் கட்டுரை ஒரு தொழிற்பெயர் பற்றியது. முன்னாள் அரசியல்வாதி கட்டுரைக்கு, கலைஞர் கருணாநிதி என்பதைப் பாருங்கள்.

ஒரு கலையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர் கலைஞர் எனப்படுவர். "படித்தோ, படிக்காமலோ கண்ணாற்பாத்து உள்ளத்தால் உணர்ந்து, கையால் செய்யக் கற்றுக்கொண்டோ, இயற்றப்படும் தொழில்கள் எல்லாம் கலைகள்." எனினும் தற்காலத்தில் கலைஞர் எனப்படுவது நாடகம், இசை, நடனம், சிற்பம் போன்ற கலைகளில் ஈடுபடுவோரையே சிறப்பாக குறிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • அன்றாடம் வாழ்க்கையில் உழைத்து உழைத்து அலுத்துக் கிடக்கிறவனுக்கும் சரி, பணத்தை ஈட்டி வைத்துக்கொண்டு, மாளிகையில் இருக்கிறவனுக்கும் சரி-கொஞ்ச நேரமாவது எண்டர்டெயின்மெண்ட் கொடுக்கிறவர்களே கலைஞர்கள்தான். —நடிகர் தேங்காய் சீனிவாசன்[1]
  • கலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்! —அரு. ராமநாதன்[2]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 81-90. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கலைஞர்&oldid=18466" இலிருந்து மீள்விக்கப்பட்டது