கஞ்சன்
Jump to navigation
Jump to search
கஞ்சன் அல்லது கஞ்சத்தனம் என்பது பணம் அல்லது பிற உடைமைகளை சேர்த்து வைப்பதற்காக, சில நேரங்களில் அடிப்படை வசதிகளையும் சில தேவைகளுக்குக் கூட செலவழிக்க தயங்கும் ஒரு நபர் அல்லது பண்பு ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- செலவாளி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். ஆனால் உலோபியோ தன்னையே கொள்ளையடித்து விடுகிறான். லா புரூயர்[1]
- உலோபிகள் உறவினருமாகார், நண்பருமாகார், -மனிதப் பிறவிகளுங்கூட ஆகார். லா புரூயர்[1]
- உலோபியிடம் எது உண்டு? எது இல்லை? அவனிடம் உள்ளவைகளும் கிடையா, இல்லாதவைகளும் கிடையா -பப்ளியஸ் ஸைரஸ்[1]
- உலோபி தன்னை இழந்து தன் ஊழியனுக்கு அடிமையாகி அவனையே தெய்வமாக அங்கீகரித்து விடுகிறான். -பென்[1]
* உயர்ந்த நன்மைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. பெரிய தீமைகள்- அவைகளைப் பணத்தால் பெற முடியாது. இதை உணர்ந்துவிட்டால் பண ஆசை என்னும் நோய் எளிதில் நிவர்த்தியாய்விடும். -கோல்ட்டன்[1]
- திருடரில் திருடன் இங்கே உளன், அவன் தன்னையே கொள்ளையிட்டவன். உலோபியின் கல்லறை எழுத்து[1]
- உலோபிகள் நல்லவர்கள், தங்கள் மரணத்தை விரும்புவோர்க்குத் தனம் சேர்த்து வைப்பவர். -லெஸ் ஜெனஸ்கி[1]
- சாத்தானுடைய வாசஸ்தலம் உலோபியின் நெஞ்சமாகும். -புல்லர்[1]
- பண ஆசை கொண்டவனுக்குத் தங்கந்தான் கடவுள். மனைவி, நண்பன். - பென்[2]
- உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான். -தியோடோர் பார்க்கர்[2]
- தங்கத்தின் சுமையைத் தாங்க முடியாமல் முனகுபவன் ரொட்டிக்காக அழுகிறான். - யங்[2]
குறிப்புகள்[தொகு]