கற்பனை
Appearance
கற்பனை என்பது மனதில் புதுமையான பொருள்கள், மக்கள், கருத்துக்கள் போன்றவற்றை உருவாக்கி உருவகப்படுத்தும் திறன் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- கல்வியறிவில்லாதவனுடைய கற்பனை, கால்களில்லாமல் சிறகுகள் மட்டும் பெற்றிருப்பது போலாகும். -ஜோபர்ட்[1]
- கற்பனையே உலகை ஆள்கின்றது. - நெப்போலியன்நெப்போலியன் [1]
- பைத்தியக்காரனும், காதல் கொண்டவனும், கவிஞனும் கற்பனையில் ஒன்றாவர். - ஷேக்ஸ்பியர்[1]
- எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகியல் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்ககண்டுதான் மனிதன் பத்து தலையை 'கற்பனை' செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்துவிடவில்லை. -ஜெயகாந்தன்
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 158. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.