நெப்போலியன் பொனபார்ட்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
நெப்போலியன் பொனபார்ட்

நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது.


மேற்கோள்கள்[தொகு]

அன்பு[தொகு]

  • உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான்.[1]

தான்[தொகு]

  • நான் மட்டும் எனக்கு மீண்டும் வெண்கல பேரை அழைத்து: சாதாரண ஆண்கள் இரும்பு ஆண்கள் கைது செய்யப்பட்டனர், இறந்தார்.

வரலாறு[தொகு]

  • சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது? [2]

தன் சிறைவாசம் குறித்து[தொகு]

  • மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது. அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது. — (20.12-1816)[3]
  • நான் இங்கிலாந்தின் விருந்தாளியேயன்றி சிறையாளன் அன்று. இங்கிலாந்து தேசத்துக்கு நான் அடைக்கலமாக வந்தேன். என் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அறநெறியையும் சட்டமுறையையும், சமூகத் தர்மத்தையும் இழந்து அதர்மத்தில் இறங்கினர். அவர்களது நடவடிக்கை பிரிட்டிஷ் பெருமைக்கேற்றதா என்று நான் கேட்கிறேன். சென்ட் ஹெலினவில் என்னை ஆயுள்வரையிலும் கிறை செய்தல் கொடுமையினும் கொடுமையாகும். அ ஃ து கேவலம் அநாகரிகக் காரியமாகும். ஆங்கிலேயர்கள் இவ்வளவு கொடுமையாக என்னை நடத்துவார்கள் என்று நான் கனவிலும் கருதினேனில்லை. அத்தீவில் சிறை செய்தலைக் காட்டிலும் என்னைச் சுட்டுக் கொன்று விடுவதே சாலச்சிறந்ததாகும். ஆங்கிலேயர் எனக்கிழைத்த கொடுமையைத் தெய்வமும் சகியாது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12. 
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சரித்திரம். நூல் 179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: