குடியரசு
குடியரசு (Republic) என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- குடியரசில் உரிமையை நிலை நிறுத்தக் குற்றஞ்சாட்டும் வாய்ப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- இருபது வயதில், எல்லோருக்கும் குடியரசுக் கொள்கைதான் -லமார்டைன்[2]
- முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். -மான்டெஸ்கியூ[2]
- எல்லோருக்கும் சமமான நீதி: எல்லா நாடுகளுடனும் அமைதியாக நடந்து. வாணிபம் செய்து நேர்மையாக நட்புறவு கொள்ளல் எவருக்கும் கட்டுப்படும் ஒப்பந்தங்கள் இல்லாமை: மாகாண இராஜ்யங்களின் உரிமைகள் அனைத்தையும் ஆதரித்தல் - இவையெல்லாம் நம் குடியரசுக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியவை. - ஜெஃபர்ஸன்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 2.0 2.1 2.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 160-161. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.