உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்பக் கட்டுப்பாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
குடும்பக் கட்டுப்பாடு சின்னம்

குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • குடும்பக் கட்டுப்பாடு மிக முக்கியமானதொரு விஷயம்; பாரதத்தின் தற்போதைய நிலைமைக்கும், தனிப்பட்ட குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இது ஒரு அத்தியாவசியமான சமுதாயக் கடமை. நம்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கும், மக்கட் பெருக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. —ஜவாஹர்லால் நேரு[1]
  • இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம். இந்திரா காந்தி[2]
  • ஏராளமான குழந்தைகளைப் பெறுவதைவிட சில குழந்தைகளோடு கட்டுப்படுத்தி, அவர்களுக்குப் போதுமான உணவு, துணிமணி, மற்ற வசதிகளைச் செய்து தருவதே நல்லது. —நடிகை சௌகார் ஜானகி (18-12-1960)[3]
  • வறுமை மிக்க நம் நாட்டில் ஜனத்தொகை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்றதே என்றும், அதற்கேற்ப உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லையே என்றும் நாட்டுத் தலைவர்கள் கவலுகின்றனர். சில ஆண்டுகள் வாழ்ந்தாலும் அறிவுள்ள மகன்தான் வேண்டுமென்று மார்க்கண்டனை மைந்தனாகப் பெற்றனர் அவர் தந்தையார். சைவம் தழைக்க மகவு வேண்டுமென்று சிவபாத விருதயரும் பகவதியம்மையாரும் தவமிருந்து ஈன்றனர் ஞானசம்பந்தப் பெருமானே. அதுபோல் நல்ல மக்கள் ஒருசிலர் ஒவ்வொரு குடும்பத்திலுமிருந்தால் போதும். அறிவற்ற மக்கள் பலர் வேண்டாம். பல குழந்தைகளிருந்தால் அவர்களை நாம் சரிவரப் பாதுகாக்க முடியாது. —திருமதி மரகதவல்லி சிவபூஷணம் பி.ஏ. பி.டி., (25 - 12 - 1953)(சைவ மங்கையர் மாநாட்டுத் தலைமையுரை)[4]
  • பாரதத்தைப் போன்ற பசியால் பீடிக்கப்பட்ட நாட்டில் யோசனையின்றி, வசதியாகப் பராமரிக்கும் சக்திக்கு அப்பாற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை முடிவில்லாத கஷ்டத்திற்குள்ளாக்கி, குடும்பத்தையும் கீழ் நிலைக்குக் கொண்டு வருதல் கொடுமையானதொரு குற்றமாகும்.- இரவீந்திரநாத் தாகூர்[5]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  5. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குடும்பக்_கட்டுப்பாடு&oldid=34926" இலிருந்து மீள்விக்கப்பட்டது