குற்றமுள்ள நெஞ்சு
Appearance
குற்றமுள்ள நெஞ்சு குறித்த மேற்கோள்கள்
- குற்றமே சோகத்தின் நரம்பு. - புஷ்னெல்[1]
- குற்றமான செயல் என்ற உடலிலிருந்து பயங்கள். பழைய நினைவுகளாகிய ஆயிரம் ஆவிகள் கிளம்பி வருகின்றன. - வோர்ட்ஸ்வொர்த்[1]
- குற்றத்தின் நெஞ்சில் தேள்கள் நிறைந்துள்ளன. - ஷேக்ஸ்பியர்[1]
- குற்றத்தைத் தவிர, இயற்கையிலுள்ள மற்ற எல்லாத் துயரங்களும் சேர்ந்து உடனே வந்தாலும் நாம் தாங்கலாம். - ஷேக்ஸ்பியர் [1]
- நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர். -ஷேக்ஸ்பியர்[1]
- குற்றமுள்ள நெஞ்சு சந்தேகத்தால் குறுகுறுத்துக்கொண்டேயிருக்கும் திருடன் ஒவ்வொரு செடியையும் ஓர் அதிகாரி யென்று அஞ்சுவான். - ஷேக்ஸ்பியர்[1]