சத்யஜித் ராய்
Jump to navigation
Jump to search
சத்யஜித் ராய் (Satyajit Ray, மே 2, 1921 - ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர். தன்னுடைய திரைப்படப் பணிக்காக ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர், சத்யஜித் ராய். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.
மேற்கோள்கள்[தொகு]
படைப்பாளியின் சமூகப் பொறுப்பு[தொகு]
- ஒரு படைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப் போனால், மற்ற மனிதர்களைவிட சற்று முழுமை பெற்ற மனிதன், தன் வாழ்க்கைச் சூழலிலிருந்தும், அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் காரியங்களில் இருந்தும் முழுமையாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவே எந்த ஒரு படைப்பிலும், ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம் பெற்றே தீரும்.தனது படைப்புகள் மூலம், அந்த சமூகப் பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் படைப்பாளி பிரச்சனைகளைத் தொடுவதன் நோக்கம். பிரக்ஞையடைந்த மக்கள் தமக்கான தீர்வுகளைத் தாமே சிந்தித்து முடிவு செய்வார்கள்.