சமூகச் செல்வாக்கு
Appearance
ஒரு நபரின் எண்ணங்கள் அல்லது செயல்களால் மற்றவர்கள் பாதிக்கப்படும்போது சமூக செல்வாக்கு ஏற்படுகிறது.
- மனிதர்களை வசப்படுத்துவது. அவர்களைக் குறை சொல்வதாலன்று. அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதால் இயலும். - சான்னிங்[1]
- ஒருவருடைய குணம் வெளியே பரிமளிப்பது செல்வாக்கு. - டெயிலர்[1]
- மிகுந்த அனுதாபமில்லாத இடத்தில் சொற்பச் செல்வாக்குதான் இருக்கும் - எஸ். ஐ. பிரைம்[1]
- மற்றவர்களுடைய அரிய சொற்பொழிவுகளைக்காட்டிலும், நல்லவர்களுடைய ஒரு சொல் அல்லது தலை அசைப்பு அதிகச் செல்வாக்குடையது. - புளுடார்க்[1]
- மிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும் முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும். - பாஸ்கல்[1]