உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கனம்

விக்கிமேற்கோள் இலிருந்து

சிக்கனம் என்பது தேவையற்ற செலவுகளைச் செய்யாமல் இருதலாகும். இது பணத்தை சேமிக்கும் ஒரு நடைமுறையுமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • சிக்கனமாயிருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போலாகும். சாம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப்போல அவ்வளவு கடினமான காரியமன்று. -ஸதே[1]
  • சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார். -ஜாண்ஸன்[1]
  • செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டுவித இன்பமும் துய்ப்பவன். -ஜாண்ஸன்[1]
  • தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச்சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும். -பென்[1]
  • சிக்கனம்-அதுவும் ஒரு வித வருமானமே. -ஸெனிக்கா[1]
  • வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம். -பிராங்க்லின்[1]
  • தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே. -பென்[1]
  • வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே. -ப்ளுட்டார்க்[1]
  • பெரிய தொழில்கள் சிலரைச் செல்வராக்கும்; ஆனால், பெரும்பாலோர் கவனத்தினாலும் சிக்கனத்தினாலுமே செழிப்படைகின்றனர். - டி. டி. முங்கெர்[2]
  • ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும். - பேக்கன்[2]
  • கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை. - பப்ளியஸ் ஸைரஸ்[2]
  • தேவையில்லாமல் கூடுதலாக வாங்கும் பொருள் எதுவும் மலிவன்று. ஓரணா ஆனாலும் அது கிராக்கிதான். - புளுடார்க்[2]
  • சேமித்தலே ஒரு கல்வியாகும்; மற்ற நற்குண்ங்களை அது போற்றி வளர்க்கின்றது. அது தன்னலமறுப்பைக் கற்பிக்கின்றது. ஒழுங்கு முறையிலும் முன் யோசனையிலும் பயிற்சியளிக்கின்றது. இவ்வாறு மனம் விரிவடையச் செய்கின்றது. - டி. டி. முங்கெர்[2]
  • உண்மையும் உழைப்பும் உனக்கு இடைவிடாத தோழர்களாயிருக்கட்டும். வருமானத்திற்கு ஓரணா குறைத்துச் செலவழிக்கவும். பின்னால் உன் பையில் பணம் மிஞ்சும் கடன்காரர் தொல்லை இராது. தேவையால் கஷ்டப்பட வேண்டாம். பசி வாட்டாது துணியில்லாமல் வாடையில் வருந்த வேண்டாம். -ஃபிராங்க்லின்[2]
  • பைசாவை நீ கவனித்தால் போதும், ரூபாய்கள் தாங்களே தங்களைக் கவனித்துக்கொள்ளும். -ஃபிராங்க்லின்[2]
  • சிக்கனம் வாழ்க்கைப் போராட்டத்தில் பாதியாகும், பணம் தேடுதல் அவ்வளவு கஷ்டமன்று. அதை முறையாகச் செலவழிப்பதே கஷ்டம் - ஸ்பர்ஜியன்[2]


பழமொழிகள்

[தொகு]
  • சிக்கனம் என்பது வருவாய்க்குத் தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று, அதற்கு அறிவும் திறமையும் தேவையில்லை.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிக்கனம். நூல் 113- 114. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 180-181. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிக்கனம்&oldid=21322" இலிருந்து மீள்விக்கப்பட்டது