உள்ளடக்கத்துக்குச் செல்

புளூட்டார்க்

விக்கிமேற்கோள் இலிருந்து
புளூட்டார்க் சிலை

புளூட்டார்க் (Plutarch - கிபி 46 - கிபி 120) ஒரு கிரேக்க வரலாற்றாளரும், வாழ்க்கை வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே; ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக்கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம்; உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது.[1]
  • நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று.[2]
  • பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய்.[3]
  • வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.[4]
  • புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும்.[5]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கேட்டல். நூல் 157-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/சிக்கனம். நூல் 138- 140. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/முகஸ்துதி. நூல் 92- 95. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புளூட்டார்க்&oldid=19028" இலிருந்து மீள்விக்கப்பட்டது