ஜிசொப்பி மாசினி

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜிசொப்பி மாசினி (1860)

ஜிசொப்பி மாசினி (Giuseppe Mazzini 22 சூன் 1805–10 மார்ச்சு 1872) என்பவர் இத்தாலிய அரசியலாளர், இதழாளர் மற்றும் செயற்பாட்டாளர் ஆவார். இத்தாலி ஒற்றுமையுடன் இருப்பதற்கும் உரிமை பெறுவதற்கும் பாடுபட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  • இவர் அனைத்தையும் தியாகம் செய்தார்; அவ்வளவு அதிகமாக அதைச் செய்தார்; அதிகமாக மன்னிக்கவும் இரங்கவும் செய்தார். யாரையும் துவேசித்ததில்லை. -மாஜினி கல்லறைமீது[2]

உழைப்பு[தொகு]

  • உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும்.[3]

உறுதி[தொகு]

  • நிலையான உறுதிதான் மற்ற பண்புகளுக்கெல்லாம் துணையாகும்.[4]

கல்வி[தொகு]

  • கல்வியே ஆன்மாவின் உணவு, அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றுவிடும், பயன்தரா.[5]
  • கல்வியும் வாளுமே ஒரு தேசம் புத்துயில் பெறுவதற்கும் விடுதலை பெறுவதற்குமான இரண்டு சாதனங்கள் ஆகும்.[5]

சமத்துவம்[தொகு]

  • இறைவனின் சட்டப்படி அவன் மனித சமூகத்திற்கு அளித்துள்ள அந்தச் சட்டத்தின்படி எல்லா மனிதர்களும் சுதந்தரமானவர்கள், சகோதரர்கள், சமத்துவமானவர்கள்.[6]

தியாகம்[தொகு]

  • தன்னைப் பிறர்க்காகத் தியாகம் செய்தல் சகல சமயங்களுக்கும் அழியாத அஸ்திவாரம்- அது ஒன்றே சாஸ்வதமான உண்மையறம்.[7]
  • இலட்சியம் சீக்கிரமாகப் பழுத்துப் பயன் தருவது, தியாகம் செய்வோருடைய இரத்தம் பாய்ந்து போஷிக்கப்படும் பொழுதுதான்.[7]

நாகரிகம்[தொகு]

  • ஜன சமூகங்கள் வாழலாம், அல்லது வாழாமல் மடியலாம். ஆனால் நாகரிகம் மட்டும் ஒருநாளும் மறைந்து விடாது.[8]

நூல்கள்[தொகு]

  • என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.[9]

வறுமை[தொகு]

  • வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.[10]

குறிப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. The Italian Unification
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. 5.0 5.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174-175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. 7.0 7.1 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/தியாகம். நூல் 149-150. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜிசொப்பி_மாசினி&oldid=38198" இலிருந்து மீள்விக்கப்பட்டது