உள்ளடக்கத்துக்குச் செல்

வேலை

விக்கிமேற்கோள் இலிருந்து
(உழைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேலை (Work) என்பது ஒரு குறிக்கோளை அல்லது பலனை அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சி. உழைப்பு (Labor) என்பது ஒரு பணியில் செலவிடப்படும் முயற்சி.


  • மாபெரும் லட்சியத்தையும், வெற்றியில் நம்பிக்கையையும், வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! - அம்பேத்கர்
  • வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • வாழ்க்கையில் முன்னேற,குன்றாத உழைப்பு,குறையாத முயற்சி,வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்
  • உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை;தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும்,மதிப்புகளுக்கும் மூலம். — கார்ல் மார்க்ஸ்.
  • உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. – ஹாலி
  • ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள். - ராபர்ட் கோலியர்[1]
  • உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும். - மாஜினி [1]
  • வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்கவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஸ்கின்[1]
  • தெய்வ நம்பிக்கைக்கு அடுத்தது உழைப்பில் நம்பிக்கை. - போவீ[1]
  • உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம். - வால்டேர்[1]
  • கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு எனக்குத் தெரியாது. -இ. டர்னர்[1]
  • வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உன்னத நிலையை அடைய முடியும், அதற்குத் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது. - ஜான்ஸன்[1]
  • தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன். - கார்லைல்[1]
  • கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. - பீட்டி[1]
  • சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும். - எமர்சன்
  • திறமைதான் ஏழையின் மூலதனம். - எமர்சன்
  • சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான். - ஹென்றி போர்டு
  • உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக்களிப்பே. - ஹென்றி போர்டு
  • மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும். - ஹென்றி ஃபோர்ட்[2]
  • துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! - சுவாமி விவேகானந்தர்
  • கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. - சுவாமி விவேகானந்தர்
  • எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. - சுவாமி விவேகானந்தர்
  • எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். - சுவாமி விவேகானந்தர்
  • பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை - சுவாமி விவேகானந்தர்
  • முதியவர்கள் தமக்கு இன்னும் எஞ்சிய காலத்தை நினைத்துக்கொண்டு உழைக்கிறார்கள். இளைஞர்கள் ஊழிக்காலத்திற்கும் உழைக்கிறார்கள்.
    • ஜவகர்லால் நேரு (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[3]
  • எனக்கு வேலையில் பிரியம்: அது என்னைக் கவர்ந்துவிடுகின்றது. நான் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். - ஜே. கே, ஜெரோம்[2]
  • நிலையான கருத்துடன் இருத்தல் என்பது என்னுடைய இலட்சிய வாக்கியம். முதலில் யோக்கியதை, பிறகு சுறுசுறுப்பு. பிறகு நிலையான கருத்துக்கொள்ளல். - ஆண்ட்ரூ கார்னேகி[2]
  • மனிதன் ஒரு தொழிலாளி. அவன் அப்படியில்லையானால், அவன் எதுவுமில்லாதவன். - ஜோஸஃப் கான்ராட்[2]
  • முதலாளிகளால் தொழிலாளி நசுக்கப்படாமலிருக்கவும் தொழிலாளரால் மூலதனம் போட்டவர்களுக்கு இடையூறில்லாமலிருக்கவும். தொழிலாளரே தொழிலாளரை அடக்காமலும். முதலாளிகளே முதலாளிகளை நசுக்காமலும் இருக்கும் நிலையை உண்டாக்க வேண்டுமென்ற முறையில், நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். - ஜான் டி ராக்ஃபெல்லர்[2]

சான்றுகள்

[தொகு]
  1. http://tamilcube.com/res/tamil-quotes.aspx
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128-129. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318-319. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=வேலை&oldid=36279" இலிருந்து மீள்விக்கப்பட்டது