டான்டே அலிகியேரி

விக்கிமேற்கோள் இலிருந்து
டான்டே அலிகியேரி, Giotto ஆல் வரையப்பட்ட இவ்வோவியம் புளொரன்சில் உள்ள பார்கெலோ மாளிகைச் சிற்றாலயத்தில் உள்ளது. டாண்டேயின் மிகப் பழமையான இந்த ஓவியம் அவர் வாழ்ந்த காலத்தில் வரையப்பட்டது.

டான்டே அலிகியேரி (Dante Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான "டிவினா காமெடியா" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும்.

மேற்கோள்கள்கள்[தொகு]

அறிவீனம்[தொகு]

  • உண்டென்றோ அல்லது இல்லையென்றோ பகுத்தறியாது பகர்வோரே மூடர்கள், அனைவரிலும் தாழ்ந்தவர்.[1]

கலை[தொகு]

  • கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது.[2]

சுதந்திரம்[தொகு]

  • மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். [3]

புகழ்[தொகு]

  • உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும்.[4]

சான்றுகள்[தொகு]

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவீனம். நூல் 61- 63. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 154-155. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=டான்டே_அலிகியேரி&oldid=34680" இலிருந்து மீள்விக்கப்பட்டது